Sunday 19th of May 2024 03:35:28 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையுடனான முதல் போட்டியில் தென்னாபிரிகா வெற்றி!

இலங்கையுடனான முதல் போட்டியில் தென்னாபிரிகா வெற்றி!


இலங்கை - தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி 28 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற தென் ஆபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதற்கமைய, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்த தென் ஆபிரிக்க அணி 163 ஓட்டங்களைபட பெற்றுக்கொண்டது.

எய்டன் மார்க்ரம் 01 பவுண்டரி, 02 சிக்ஸர்கள் அடங்களாக 48 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க 23 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

164 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

தினேஷ் சந்திமால் 5 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடங்களாக 66 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் தென் ஆபிரிக்க அணியின் கேஷவ் மஹராஜ் 19 ஓட்டங்களை கொடுத்து 01 விக்கெட்டை கைப்பற்றினார்.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE